Do you know how to Wear Rudraksha properly?ருத்ராட்சத்தை எப்படி முறையாக அணிவது தெரியுமா ?
ருத்ராட்சத்தை எப்படி முறையாக அணிவது தெரியுமா ?
ருத்ராட்சம்
ருத்தராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர்.ருத்ராட்சத்தில் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடியவையே. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றால்போல் அதில் மருத்துவம் மற்றும் ஆன்மீக குணங்களும் உள்ளன.
ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்
இரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ருத்ராட்சத்தை பார்ப்பதே புண்ணியம், அதை தொட்டால் கோடி புண்ணியம், ருத்ராட்சத்தை அணிந்தால் பலகோடிபுண்ணியம் என்று கூறப்படுகிறது. சிவனடியார்கள் போற்றப்படும் ருத்திராட்சங்கள் இரண்டு முகம், மூன்று முகம், ஐந்து முகம், பதினோரு முகம், பதினான்கு முகம் ஆகும்.
ருத்ராட்சம், ருத்திரன் மற்றும் அட்சன் அதாவது ருத்திரன் என்பது சிவனையும் அட்சன் என்பது கண்களையும் குறிப்பிடுவதாகும். ஈஸ்வரன் மனிதர்களின் நலனுக்காக பல ஆண்டுகள் தவம் புரிந்தபின் கண்களை திறந்தபோது அவர் கண்களிலிருந்து வந்த நீரே ருத்ராட்ச மணிகளாக மாறியது என சிவபுராணம் கூறுகிறது. இதுபோல பல சிறப்புடைய ருத்ராட்சத்தை எப்படி அணிவது என்பதை பார்ப்போம்.
ருத்ராட்சத்தை ஆண் பெண் இருவரும் அணிவதில் பேதம் கிடையாது. ஆனால் அணிவதற்கும் அணிந்தபிறகும் அதற்க்கு சில விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். தீட்டுநாட்களில் ருத்திராட்சத்தை அணியாமலிருத்தல் அவசியம் என்றும் கூறுகின்றனர் சிலர் பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம் அது ஒன்று ம் குரோதம் கிடையாது. வட இந் திய ப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டி ருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
ருத்ராட்சத்தை அணியவிரும்புவோர் ருத்ராட்சத்தை பற்றி முழுமையகக தெரிந்தவரின் உதவியோடு கடையில் வாங்கவேண்டும். பின்பு ருத்ராட்சத்தை பசுவின் நெய்யிலோ அல்லது நல்லெண்ணையிலோ ஊறவைக்கவேண்டும். பின் எலுமிச்சை சார்கொண்டு சுத்தம் செய்யவேண்டும் அதன் பின் சிவனின் திருநீற்றில் ஒரு தினம் ருத்ராட்சத்தை வைக்கவேண்டும். பின்பு ருத்ராட்சத்தை பசும்பாலைகொண்டு சுத்தம் செய்யவேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவவேண்டும். அதன்பின் அருகில் உள்ள சிவத்தலங்களுக்கு சென்று ஈசன் காலில் வைத்து பூஜித்து குரு, ஆன்றோர் அல்லது சிவனடியார் உதவியுடன் அணிந்துகொள்ள வேண்டும் .
பல நன்மைகளை கொண்ட ருத்திராட்சத்தை நீங்களும் அணிந்து பயன்பெறுங்கள்.
Reach us to be a part of our whatsapp spiritual reminder group