How is Nandi at Arunachaleswarar temple different from the other temple Nandis?

நமக்கு தெரியாத திருவண்ணாமலைப்பற்றிய அபூர்வ தகவல்.பொதுவாக சிவன் கோவில்களில் உள்ள  நந்தி இடக்காலை மடக்கி வல காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். அண்ணாமலையார் கோவிலில் நந்தி அதற்கு மாறாக வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து உள்ளது.

முன்காலத்தில் அண்ணாமலையார்  கோவிலுக்கு பெரும் ஆபத்து வந்தது. அதை பக்தரான வீரேகிய முனிவரின் வழியாக அண்ணாமலையாரே எதிர்கொண்டார். ஏன் என்று கீழ் உள்ளவற்றில் காணலாம்.

முகலாய அரசன் ஒருவன் அண்ணாமலை கோவிலை இடிக்க நினைத்தான். அப்பொழுது  கோவிலின் அருகே  காளைமாட்டினை ஐந்து  சிவபக்தர்கள் பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அந்த முகலாய அரசன் நாங்கள் வெட்டி உணவாக உண்ணும் காளைமாட்டினை நீங்கள் தலையில் வைத்துக்கொண்டு வணங்குவது சரியாய் என கேட்டார்?

29002351942_c3e20bc5f6_b

அதற்க்கு சிவபக்தராகிய ஐவரும் முகலாயஅரசனிடம்   காளை எங்கள் சிவபெருமானின் வாகனம், எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியமாக கருதுகிறோம் என்றார்கள்.அதற்க்கு அரசன் உங்கள் கடவுளாகிய சிவன்( அண்ணாமலையார்) உண்மையில் சக்தியுடையவராயினும் இந்த காளைமாட்டை  காப்பாற்றச்சொல்  என்று கூறி மாட்டை வெட்டினார்.

ஐவரும்  பதறியபடி அண்ணாமலையானைநோக்கி முறையிடச்சென்ற இடத்தில அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்மபக்தன் ஒருவன் நமச்சிவாய என்று ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனைத்தேடி அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

உடனே அந்த சத்தத்தை கேட்டு ஐவரும் அவ்விடத்தைநோக்கி சென்றனர் அங்கு சிறு வயது பாலகனை  கண்டனர். இச்சிறுபாலகனா  பக்தன் என ஏளனம் செய்தபோது அங்கே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரும் வரையும் தாக்க முயன்றபோது நமச்சிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினார். நடந்ததைகூறி அந்த சிறுபாலகனை ஐவரும்   அண்ணாமலையார் சன்னிதிக்கு அழைத்து சென்றனர். அந்த பாலகனிடம் நடந்ததை கூறி அந்த அரசனிடம் ஐவரும்  இந்த பாலகன் அந்த இருதுண்டுகளான மாட்டை   உயிர் கொடுப்பதாக  கூறினார்கள். அச்சிறுவன் அண்ணாமலையார் சன்னிதிக்கு சென்று நமச்சிவாய மந்திரம் கூறி அந்த மாட்டை உயிர்பெற செய்தான் ஆனால் முகலாய அரசன் அந்த சிறுவன் சித்துவேலை  செய்வதாக கூறி நம்ப மறுத்தார்.

முகலாய அரசர் அச்சிறுவனிடம் அவர் மற்றொரு வாய்ப்பு தருகிறேன் இதில்  நீ  வெற்றிப்பெற்றால் நான் கோவிலை சிதைக்க மாட்டேன் ஆனால் நான் வென்றால் சிதைத்துவிடுவேன் என்று கூறினார். அச்சிறு பாலகன் சற்றும் மனம் சளைக்காமல் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.

அரசன் வீரர்களிடம் கூறி தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையானுக்கு படையல் இடுங்கள் அவரின் சக்தி உண்மையென்றால் மாமிசம் பூக்களாக மாறட்டும்  என்றார். அதேபோல் வீரர்களும் செய்தனர் மாமிசம் பூக்களாக மாறியதைக்கண்ட ஐவருடன் அச்சிறுவனும் ஓம் நமசிவாய அண்ணாமலையானுக்கு அரோகரா எனப்போற்றி பேரானந்தம் அடைந்தனர்.

இதனையும் நம்பாத அரசர் கடைசியாய் ஒரு போட்டி என்று கூறினார் அண்ணாமலையார் கோவிலில் உள்ள உயிரில்லாத இந்த நந்தியை உயிர்கொடுத்து காலை மாற்றி மடித்து  வைத்து உட்கார்ந்துவிட்டால் நான்  இந்த அண்ணாமலையான் கோவிலை சிதைக்காமல் கொள்ளையடித்த தங்கத்தை அவரிடமே ஒப்படைத்து விட்டுச்செல்கிறேன் என்றார்.

பாலகனும் ஐவரும்  நமசிவாய மந்திரத்தை நிறுத்திவிட்டு அண்ணாமலையானிடம் பெரிய நந்தியை உயிரூட்டுமாறு கூறினார் இறைவன் கருணைக்கடல் அல்லவா! உடனே பெரிய நந்திக்கு உயிர்கொடுத்து கால் மாற்றி மடக்கி அமருமாறு உத்தரவிட்டார் அன்று தான் நம் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலதுகாலை மடித்து இடதுகாலை முன்வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசரும் சொன்னவாறே அனைத்தையும் ஒப்படைத்து விட்டு அண்ணாமலையாரை வணங்கி சென்றுவிட்டார்.

29107391935_53c678b324_b

அச்சிறுவன் தான் இன்று விரேகிய முனிவர் ஆவர். அவர் ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திருப்பி காணப்படுகிறது அவர் நினைவாக கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP