Did you know? The name of the Tamil months is a secret
எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி திதி ஓவ்வொரு மாதமும் வருகிறதோ அதுவே அந்த மாதத்தின் பெயர் ஆகும்.
1. சித்திரை மாதத்தில் பௌர்ணமி சித்திரை நச்சத்திரத்தில் வருவதால் சித்திரை என்ற பெயர் ஏற்பட்டது.
2. வைகாசி மாதத்தில் வைசாகம் நச்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் வைசாகம் எனப் பெயர் ஏற்பட்டு வைகாசி என மாறியது.
3. ஆனியில் அனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் ஆன்ஹி மாதம் என அழைக்கப்பட்டு ஆனி மாதம் என மாறியது.
4. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் என அழைக்கப்பட்டு பூராடம் என மருவிய நட்சத்திரத்தில் ஆடி மாத பௌர்ணமிவருவதால் ஆஷாடம் என அழைக்கப்பட்டு ஆடி என்று மாறியது.
5. ஆவணியில் சிரவணம் எனப்படும் திருவோணம் அல்லது அவிட்டம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். இந்த சிரவண மாதமே ஆவணி என தமிழில் கூறப்படுகிறது.
6. உத்திர ப்ரோஷ்டபடம் என்ற நட்சத்த்திரம் உத்திரட்டாதி ஆனது. புரட்டாசியில் இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் ப்ரோஷ்டபதி என்ற மாதம் மருவி புரட்டாசி என்று ஆனது.
7. அஸ்வினி நட்சத்திரத்தை அசுபதி என்கிறோம். இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் அசுபதி மாதம் ஐப்பசி ஆனது.
8. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். எனவே இம்மாதம் கார்த்திகை ஆயிற்று.
9. மார்கசீர்ஷி என்ற நட்சத்திரம் மிருகசீரிஷம் ஆனது. மார்கழி மாதத்தில் இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மார்கசீர்ஷி மாதம் மார்கழி ஆனது.
10. தைஷ்யம் என்ற நட்சத்திரம் புஷ்யம் என்றாகி தமிழில் பூசம் ஆனது. தைமாதத்தில் தைஷ்யத்தில் பௌர்ணமி வருவதால் தை என அழைக்கப்படுகிறது.
11. மாகம் என்ற நட்சத்திரத்தில் மகம் ஆனது. மாசியில் இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகம் என்பது மாசி என மாற்றம் பெற்றது.
12. பங்குனி மாதத்தில் பூர்வ பல்குணம், உத்திரம் பல்குணம் என்ற இரு நட்சத்திரங்களில் பௌர்ணமி வரும். இவை பூரம் என்றும், உத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி வருவதால் பல்குண மாதம் எனப் பெயர் பெற்றது பங்குனி எனத்திரிந்தது.
The full moon falls on a particular nakshatra in the tamil month. It is believed that the Tamil months are named after the nakshatra that coincides with the full moon.
Name of Tamil month | Full moon falls on nakshatra |
Chithirai | Chitirai star |
Vaikasi | Visakam star |
AaNi | Anusham |
Aadi | Pooraadam |
Aavani | Thiruvonam |
Puratasi | Uthiratathi |
Aippasi | Aswini |
Karthikai | Karthigai |
Margali | Murugasirisha |
Thai | Pusham |
Maasi | Magham |
Phanguni | Puram, Uthiram |
Reach us to be a part of our whatsapp spiritual reminder group